மோடியை சந்தித்தேன் : பரபரப்பு தகவல்களுடன் நடிகர் விஜய்!!

621

Vijay_modi

கோயம்புத்தூரில் பாரதீய ஜனதா கட்சி வேட்பாளரான நரேந்திர மோடியை நடிகர் விஜய் சந்தித்துள்ளார். கோயம்புத்தூரில் நடைபெற்ற லோக்சபா தேர்தல் பிரசார கூட்டத்தில் நரேந்திர மோடி கலந்து கொண்டார்.

பிரசார கூட்டத்தை முடித்த பின்னர் கோயம்புத்தூரிலேயே தங்கிய அவருடன், நடிகர் விஜய் சுமார் 20 நிமிடங்கள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

இதுகுறித்து விஜய் தனது டுவிட்டர் பக்கத்தில், நான் பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடியை சந்தித்து பேசியதற்கு அரசியல் நோக்கம் இல்லை.

கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்னை வந்த போது மோடி என்னை சந்திக்க விருப்பம் தெரிவித்து இருந்தார். அப்போது நான் ஆந்திர மாநிலத்தில் படப்பிடிப்பில் இருந்ததால் அவரை சந்திக்க முடியவில்லை.

தற்போது அவருடைய விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக அவரை சந்தித்தேன். அவருக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்தேன் என்று கூறியுள்ளார். மேலும் மோடியுடன் இணைந்து எடுத்த படங்களையும் நடிகர் விஜய், தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.