
குஷ்புவின் தீவிர பிரச்சாரம் ரத்து செய்யப்பட்டதற்கான காரணம் தெரியவந்துள்ளது. நடிகை குஷ்பு தமிழ்நாடு முழுவதும் திமுகவை ஆதரித்து சூறாவளி பிரசாரம் செய்து வந்தார்.
இந்நிலையில் கடந்த 10ம் திகதி பிரசாரம் மேற்கொண்ட குஷ்பு, நான் திமுக உறுப்பினராக வந்து உங்களை சந்திக்கிறேன், தமிழக மக்களை பார்க்கும் போது மிகவும் சந்தோஷப்படுகிறேன் என்று பேச்சை ஆரம்பித்தார்.
மேற்கொண்டு பேசிய அவர், நான் உங்கள் வீட்டு மகளாக, உங்கள் வீட்டு மருமகளாக வந்து வாக்கு கேட்கிறேன். எனக்காக வாக்கு கேட்கவில்லை, தமிழக நலனுக்காக, தமிழக மக்களின் நலனுக்காக கேட்கிறேன்.
ஜெயலலிதாவிற்கு வாக்களித்தீர்கள், ஆனால் அவர் இந்த மூன்று வருடத்தில் என்ன செய்தார், ஒன்றும் செய்யவில்லை, நமக்கு ஏமாற்றம் மட்டுமே கிடைத்துள்ளது.
ஒரு ஆட்சி முடிந்து மற்றொரு ஆட்சி வந்தா முன்னாடி இருந்தவங்களை ஓவர்டேக் பண்ண நினைப்பாங்க. பொய், பித்தலாட்டம், விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு இதுல ஓவர்டேக் பண்ணிட்டாங்க என்று கூறி மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளார்.
இந்நிலையில் நடிகை குஷ்பு திடீரென பிரசாரத்தை ரத்து செய்து விட்டு ஓய்வெடுத்து வருகிறார். ஆனால் பிரசாரத்தில் உளறியதன் காரணமாகவே, மேலிடம் இவரை கட்டாயமாக ஓய்வெடுக்க சொல்லியிருப்பதாக கூறப்படுகிறது.




