61வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு!!

270

THanga meenkal

61வது தேசிய திரைப்பட விருதுகள் பட்டியல் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தேசிய அளவில் சிறந்த படமாக ஷிப் ஆப் தீசிஸ் என்ற திரைப்படம் தேர்வாகியுள்ளது. ஷாகித் படத்தில் நடித்த ராஜ்குமார் ராவ் சிறந்த நடிகராகவும், அப்படத்தின் இயக்குனர் ஹன்சால் மேத்தா சிறந்த இயக்குனராகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தமிழ் குறும்படமான தர்மம் சிறந்த குறும்படமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

சிறந்த அறிமுக பட இயக்குனர் விருது மராத்தி மொழி படமான ஃபாண்ட்ரி படத்தை இயக்கிய நாகராஜ் மஞ்சுலேவுக்கும், தேசிய ஒருமைப்பாட்டிற்கான சிறந்த விருது தலைமுறை படத்திற்கும், சமூக பிரச்சினைகளை விளக்கும் சிறந்த படமாக துஹ்ய தர்ம கொஞ்சா (மராத்தி), சுற்றுச்சூழல் குறித்த சிறந்த படமாக மலையாள மொழியில் உருவான பேரரிய தேவர், குழந்தைகளுக்கான சிறந்த திரைப்படமாக ஹிந்தி மொழியில் எடுக்கப்பட்ட கப்பால் ஆகியவை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

தமிழில் சிறந்த படமாக தங்க மீன்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இப்படத்திற்கு பாடல் எழுதிய நா.முத்துக்குமார் சிறந்த பாடலாசிரியாகவும், இப்படத்தில் நடித்த சாதனா சிறந்த குழந்தை நட்சத்திரமாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். வல்லினம் படத்திற்கு சிறந்த படத்தொகுப்பிற்கான விருது கிடைத்துள்ளது.

இந்த விருதுகளின் சமூக நலனை முன்னிறுத்தி சிறப்பான திரைப்படங்களை தந்த பாலுமகேந்திரா மறைந்தாலும், அவரது இடத்தை தங்க மீன்கள் படத்தை இயக்கிய ராம் மற்றும் இயக்குனர் பாலா ஆகியோர் நிரப்புவார்கள் என்ற தமிழ் திரைப்பட ரசிகர்களின் நம்பிக்கை வீண் போகாது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.