மர்மமான முறையில் உயிரிழந்த இளம் நடிகை : வீட்டில் கிடைத்த போதைப்பொருட்கள்… திடுக்கிடும் தகவல்!!

532


மொடல் நடிகை சஹானா..கேரளாவில் மர்மமான முறையில் உயிரிழந்த மொடல் நடிகை சஹானா வீட்டில் இருந்து பொலிஸார் போதைப்பொருட்களை கைப்பற்றியுள்ளது அவரது சாவில் சந்தேகத்தை அதிகரித்துள்ளது.காசர்கோட்டில் தனது கணவருடன் நடிகை சஹானா வசித்து வந்த நிலையில், நேற்று தூக்கில் தொங்கிய நிலையில் அவர் இறந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அதனைத் தொடர்ந்து அவரது சடலத்தை கைப்பற்றிய பொலிஸார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது பிறந்தநாளை கொண்டாடுவதற்காக தங்கள் வீட்டுக்கு அவர் வருவதாக சஹானா கூறியதாகவும்,


அவர் தற்கொலை செய்திருப்பார் என்று நினைக்கவில்லை என்றும் அவரது தாயார் தெரிவித்துள்ளார். மேலும், திருமணத்திற்கு பிறகு தங்கள் வீட்டிற்கு வரவும், போனில் பேசவும் சஹானாவின் கணவர் அனுமதிக்க மாட்டார் எனவும் கூறியுள்ளார்.

இந்த நிலையில், சஹானாவின் வீட்டில் பொலிஸார் சோதனையிட்டபோது, கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை கைப்பற்றியுள்ளனர்.


இதனைத் தொடர்ந்து சஹானாவின் உடலில் ஏதேனும் போதைப்பொருள் கலந்திருக்கிறதா என சோதனை நடத்தப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.