கையில் கத்தியுடன் சஹானா.. மாமியாரின் பேட்டியால் பரபரப்பாகும் இளம் நடிகை மரண வழக்கு!!

582


நடிகை சஹானா..



கேரளா இளம் நடிகை சஹானா உயிரிழந்த விவகாரத்தில், தன் மகன் கொலை செய்திருந்தால் கண்டிப்பாக அவருக்கு தண்டனை கிடைக்க வேண்டும் என சஜ்ஜத்தின் தாயார் தெரிவித்துள்ளார்.



கடந்த 13ஆம் திகதி, கேரளாவில் உள்ள கோழிக்கோடு பகுதியில் இளம் நடிகை சஹானா தனது வீட்டில் தூக்கில் தொங்கியபடி உயிரிழந்த விடயம் பரபரப்பை ஏற்படுத்தியது.




சஹானா தனது 21வது பிறந்தநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடிய நிலையில், மறுநாளே தூக்கிட்டு இறந்து கிடந்தது அவரது மரணத்தில் சந்தேகத்தை கிளப்பியது.


அத்துடன் சஹானாவின் கணவர் சஜ்ஜாத் பணம் மற்றும் பிற விடயங்களில் துன்புறுத்தி சித்திரவதை செய்திருக்கிறார் என்றும், சஹானாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டினர். சஜ்ஜாத் கத்தாரில் பணிபுரியும் போது சஹானா பல நகை விளம்பரங்களில் மொடலாக நடித்துள்ளார்.

அதன் பின்னர் அந்த தம்பதி இந்திய திரும்பியதும் சஜ்ஜாத்தின் குடும்பத்துடன் வசித்து வந்தனர். ஆனால் சஜ்ஜாத், அவரது பெற்றோர் மற்றும் சகோதரிகள் தன்னை சித்திரவதை செய்ததாக சஹானா தனது குடும்பத்தினரிடம் புகார் செய்யத் தொடங்கினார்.


அதனைத் தொடர்ந்து சில வாரங்களுக்கு முன்பு தான் தனது தாயாரின் ஆலோசனையின் பேரில் சஹானா தன் கணவருடன் கோழிக்கோட்டிற்கு இடம்பெயர்ந்துள்ளார். சஹானாவின் சகோதரர் பிலால், சஜ்ஜாத்தின் தாயாரிடமும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஊடகங்களிடம் கூறியிருந்தார்.

அவளுடைய உடலில் காயங்கள் மற்றும் தழும்புகள் உள்ளன. எனவே அவரது மரணம் குறித்து எங்களுக்கு சந்தேகம் உள்ளது, இதில் அவரது தாயாருக்கு பங்கு இருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

இந்த நிலையில் சஜ்ஜாத்தின் தாயார் கூறுகையில், ‘ஜனவரி 25ஆம் திகதியன்று அவர்கள் வெளியேறியதில் இருந்து சஹானாவுடன் எனக்கு எந்த தொடர்பும் இல்லை. திருமணமான ஒரு வாரத்தில் சஹானா-சஜ்ஜாத்தின் உறவில் பிரச்சனைகள் தோன்ற ஆரம்பித்தன.

என் மகனை வீட்டை விட்டு வெளியேறிய பிறகு ஓரிரு முறைதான் பார்த்தேன். எனது தொலைபேசி எண் பிளாக் செய்யப்பட்டிருந்ததால், அவர்களுடன் எந்த தொடர்பும் இல்லை. இங்குள்ள வாழ்க்கை அவளுடன் ஒத்துப்போகவில்லை, அவளால் அதை சரிசெய்ய முடியவில்லை.

மேலும், அவர்களை வேறு ஒரு இடத்திற்கு குடிபோக சொன்னதே நான் தான். ஒருமுறை அவர்கள் சண்டையிட்ட பிறகு நான் சஹானாவை கத்தியுடன் கண்டேன். அதனால் அவர்கள் எங்கள் இடத்தில் தங்க முடியாது,

நான் சிறைக்கு செல்ல விரும்பவில்லை என்று என் மகனிடம் கூறினேன். அவர்களிடம் இருந்த வருமானத்தில் தனித்தனியாக வாழச் சொன்னேன்’ என தெரிவித்துள்ளார்.

சஜ்ஜாத் தான் தங்கள் மகளை கொலை செய்திருப்பார் என்ற சஹானா குடும்பத்தினரின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த அவர், ‘சஜ்ஜாத் குற்றம் செய்திருந்தால் அவர் தண்டிக்கப்பட வேண்டும்.

ஆனால் அதில் எனக்கு பங்கு இருக்கிறதா என்று நீங்கள் கேட்டால், அவர்களுடன் எனக்கு எந்த தொடர்பும் இல்லை’ என தெரிவித்துள்ளார். அத்துடன், சஹானாவின் தாயார் வரதட்சணையின் ஒரு பகுதியாக, சஜ்ஜாத்தின் குடும்பத்திற்கு 25 சவரன் தங்கம் வழங்கப்பட்டதாக கூறியதை அவர் மறுத்தார்.

இதற்கிடையில், பொலிஸார் சஜ்ஜாத்தை அழைத்து வந்து, சஹானா இறந்த இரவில் நடந்த சம்பவங்களின் வரிசையை விவரிக்கச் சொன்னார்கள். பிறந்தநாளில் தாமதமாக வந்ததால் தம்பதியினருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக சஜ்ஜாத் தெரிவித்தார்.