
முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் குற்றவாளிகளாக காணப்பட்ட பேரறிவாளன், முருகன், சாந்தன் உள்ளிட்ட 7 பேர் மீதான வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் 25ம் திகதிக்குள அறிவிக்கப்படும் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம் கூறினார்.
கோவையில் மேற்கு மண்டல நீதிபதிகள் மாநாட்டில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம் கலந்து கொண்டார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது..
ஊழல், பாலியல் குறித்த வழக்கை 3 முதல் 6 மாதத்தில் விசாரித்து முடிக்க வேண்டும். முருகன், சாந்தன் உள்பட 7 பேர் மீதான வழக்கில் 25 ம் திகதிக்குள் தீர்ப்பு அறிவிக்கப்படும் என்று அவர் கூறினார்.




