தென்னிலங்கையில் சிக்கிய அபூர்வ விலங்கு : அச்சத்தில் மக்கள்!!

1698


அபூர்வ விலங்கு..மாத்தறை, மிதிகம பிரதேசத்தில் இனந்தெரியாத மிருகம் ஒன்று நேற்றைய தினம் கண்டுபிடிக்கப்பட்டதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். மிதிகமவில் பல கிராமங்களில் சுற்றித்திரிந்த விலங்கினால் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர்.இதனால் இளைஞர்கள் குழுவொன்று நேற்று முன்தினம் முதல் இந்த விலங்கை தேடி வந்தனர். அதற்கமைய, நேற்று மிதிகம ஜெயவிஜய கிராமத்தில் உள்ள வீடொன்றில் மறைந்திருந்த மிருகம் கண்டுபிடிக்கப்பட்டது.
அத்துடன், மிருகம் ஆக்ரோஷமாக செயற்பட ஆரம்பித்தமையினால் கிராம மக்கள் அதனை கயிற்றினால் கட்டி வைத்துள்ளனர். நான்கு கால் மற்றும் நீண்ட வால் கொண்ட இந்த உயிரினத்தை இதுவரை பார்த்ததில்லை என கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.


இது தொடர்பில் மாத்தறை மிரிஸ்ஸ வனவிலங்கு அலுவலகத்திற்கு அறிவிக்கப்பட்ட போதிலும் நேற்று மாலை வரை எவரும் விலங்கை ஏற்றிச் செல்ல வரவில்லை என கிராம மக்கள் தெரிவித்தனர்.