லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் அவசர அறிவித்தல்!!

911


லிட்ரோ எரிவாயு..பொதுமக்கள் எரிவாயுவுக்காக நாளைய தினம் வரிசையில் காத்திருக்க வேண்டாம் என லிட்ரோ நிறுவனம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
நாளை (24) செவ்வாய்க்கிழமை உள்நாட்டு எரிவாயு சிலிண்டர் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி, 12.5, 5 மற்றும் 2.3 கிலோ எடையுள்ள எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்படமாட்டாது எனவும் இதனால், பொதுமக்கள் எரிவாயுவுக்காக வரிசையில் காத்திருக்க வேண்டாம் என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
எவ்வாறாயினும், 7500 மெற்றிக் தொன் எரிவாயுவுக்காக 6.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலுத்தப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனத் தலைவர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.