எரிவாயு விநியோகம் மேலும் தாமதமாகும் : லிட்ரோ நிறுவனத்தின் புதிய அறிவிப்பு!!

343


எரிவாயு விநியோகம்..லிட்ரோ எரிவாயு சிலிண்டர்கள் விநியோகம் மேலும் இரண்டொரு நாட்கள் வரை தாமதமாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எரிவாயு ஏற்றிக் கொண்டு இலங்கை நோக்கி வந்த கப்பல்,தற்போதைக்கு எரிபொருள் நிரப்பிக் கொள்வதற்காக சென்னைத் துறைமுகத்தை சென்றடைந்துள்ளது. அதன் பின்னர் கப்பல் கொழும்பு வந்த பின்னரே எரிவாயு இறக்கும் வேலைகள் ஆரம்பிக்கப்படும்.
எனவே இன்னும் குறைந்தது மூன்று நாட்களின் பின்னரே லிட்ரோ எரிவாயு சிலிண்டர்கள் விநியோகம் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.