பிரபல பாடகர் கே.கே மறைவு : அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

502


பாடகர் கே.கே..பிரபல ஹிந்தி பாடகர் கே.கே., கோல்கட்டாவில் நடந்த இசை நிகழ்ச்சியின் போது உயிரிழந்தார். நிகழ்ச்சி முடிந்ததும் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.இதனையடுத்து மருத்துவமனை கொண்டு செல்லப்பட்ட அவர் உயிரிழந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இவர் தமிழ், ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில், நூற்றுக்கணக்கான பாடல்களை பாடியுள்ளார்.
கே.கே மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் திரை உலகத்தை சேர்ந்த பலரும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.