மெக்சிக்கோவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!!

656

Earthquakeமெக்சிக்கோவின் குரேரோ மாநிலத்தில் உள்ள தேக்பான் பகுதியை மையமாக கொண்டு இன்று 7.0 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கியது மட்டுமல்லாது ஜன்னல்களும் உடைந்து சிதறின. எனவே மக்கள் உடனடியாக கட்டிடங்களை விட்டு தெருவுக்கு ஓடிவந்தனர்.

இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து தகவல் ஏதும் இதுவரை வெளியிடப்படவில்லை. இதுகுறித்து மெக்சிக்கோ நகர மேயர் தனது ட்விட்டர் வலைத்தளத்தில், தலைநகர் முழுவதும் ஏற்பட்டுள்ள சேதங்களை சோதனை செய்து கொண்டிருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.