ரஜினிக்கு அரசியல் ஆசை உண்டு : ஹேம மாலினி!!

1030

Rajani-Hema Malini

ரஜினிக்கு அரசியலுக்கு வர வேண்டும் என்ற ஆசை எப்போதும் அதிகம் உண்டு என பொலிவுட் நடிகை ஹேம மாலினி கூறியுள்ளார்.

மக்களவைத் தேர்தலில் உத்திரப் பிரதேச மாநிலம் மதுராவில் பாஜக சார்பில் பாலிவுட் நடிகை ஹேமமாலினி போட்டியிடுகிறார், அவர் ஒரு பிரபல நாளிதழுக்கு அளித்த பேட்டியில்..

கேள்வி: தமிழக முதல்வர் ஜெயலலிதாவுடன் ஒரு நடிகையாக உங்களுக்கு நட்பு உண்டா?

பதில்: அது ஒரு காலத்தில் இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடித்ததுடன் சரி. பிறகு ஒருமுறை நான் அங்கு சென்று அவரை சந்தித்தேன்.

கேள்வி: சமீபத்தில் நரேந்திர மோடி சென்னை சென்றபோது ரஜினிகாந்தை சந்தித்தது பற்றி உங்கள் கருத்து?

பதில்: ரஜினியும், மோடியும் சந்தித்தது மிகவும் நல்லது. ரஜினிக்கு அரசியலில் வர வேண்டும் என்ற ஆசை எப்போதும் உண்டு. ஆனால் ஏதோ ஒரு தயக்கம் அவருக்கு உள்ளது.

என்னை அவர் பார்க்கும் போதெல்லாம், எப்படி ஹேமா நீ இதை எல்லாம் செய்கிறாய் என கேட்பார். இதற்கு நான், நீங்களும் இதை செய்யலாம் அரசியலுக்கு வாங்க என அழைப்பேன்.

பொது மேடைகளிலும் ஆயிரக் கணக்கானவர்கள் முன்னிலையிலும் ரஜினிக்கு நடிக்கவும், நடனமாடவும் மிகுந்த ஆசை. இதை நான் செய்யும் போதும் அவர், அனைவரின் முன்பாக எப்படி செய்கிறாய் என ஆச்சரியமாக கேட்பார்.

எனவே, அவருக்கு அரசியலில் வர ஆசை இருந்தும் உள்ள தயக்கம் என்ன என்பது அவருக்குத்தான் தெரியும் என்றும் அவர் நினைத்தால் தாரளமாக அரசியலுக்கு வரலாம் எனவும் கூறியுள்ளார்.