திங்கட் கிழமை அரச விடுமுறை தினமாக அறிவிப்பு!!

676


அரச விடுமுறை..எதிர்வரும் திங்கட்கிழமை 13ஆம் திகதி விசேட அரச விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுநிர்வாக அமைச்சின் செயலாளர் அறிக்கை ஒன்றின் மூலம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.அத்தியாவசிய சேவைகளுக்கு பாதிப்பில்லை எனினும், அத்தியாவசிய அரச சேவைகளில் ஈடுபடுவோருக்கு இந்த விடுமுறை பாதிப்பை ஏற்படுத்தாது என கூறப்பட்டுள்ளது.
அனைத்து அரச மற்றும் கத்தோலிக்க பாடசாலைகளும் எதிர்வரும் 13ம் திகதி மூடப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. எதிர்வரும் திங்கட்கிழமை விசேட விடுமுறை தினமொன்று அறிவிக்கப்பட்ட நிலையிலேயே, பாடசாலைகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் போக்குவரத்து பிரச்சினைகளை கருத்திற் கொண்டு இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.