மன்னாரில் இரு சகோதரர்கள் கொடூரமாக வெட்டிக் கொலை!!

1511


மன்னாரில்..மன்னார் – நொச்சிக்குளம் பகுதியில் இன்று (10.06.2022) காலை இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். இரண்டு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட முறுகல் வாள்வெட்டில் முடிவடைந்ததாக முதற்கட்ட தகவல் தெரிவிக்கின்றன.சம்பவத்தில் படுகாயமடைந்த 4 பேர் மன்னார் பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்கள் உயிலங்குளம் பகுதியை சேர்ந்த சகோதரர்கள் இருவர் என்று தெரியவந்துள்ளது.
மேலும் சடலங்கள் மன்னார் பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.