வெளிநாட்டவரை நெகிழ்ச்சியடைய வைத்த கிளிநொச்சி இளைஞனின் செயல்!!

1110


செல்லத்துரை தவக்குமார்..கிளிநொச்சியில் தவறவிட்ட 4 இலட்சம் பெறுமதியான கையடக்க தொலைபேசியினை இளைஞர் ஒருவர் உரியவரிடம் ஒப்படைத்துள்ளார். கிளிநொச்சி திருவையாறு பகுதியில் தனது 4 இலட்சம் ரூபா பெறுமதியான கையடக்க தொலைபேசியினை வெளிநாட்டிலிருந்து வருகை தந்தவர் தவறவிட்டுள்ளார்.இந்நிலையில் அதனை கண்டெடுத்த கிளிநொச்சி புதுமுறிப்பு இளைஞன் தொலைபேசியை உரிமையாளரிடம் ஒப்படைத்துள்ளார். குறித்த இளைஞனின் செயலை பலரும் பாராட்டியுள்ளனர்.
வெளிநாட்டிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த ஒருவர் கிளிநொச்சியில் உள்ள கிராம பாடசாலை ஒன்றுக்கும், முள்ளம் தண்டு வடம் பாதிக்கப்பட்ட நபர் ஒருவருக்கும் உதவி செய்யும் பொருட்டு கிளிநொச்சிக்கு விஜயம் செய்துள்ளார்.


இதன்போது பாடசாலையினையும், முள்ளம் தண்டு வடம் பாதிக்கப்பட்டவரையும் நேரடியாக பார்வையிட்டு திரும்பிக்கொண்டிருந்த போது அவரது 4 இலட்சம் ரூபா பெறுமதியான கையடக்க தொலைபேசியினை வீதியில் நேற்று முன்தினம் (08.06) தவறவிட்டுள்ளார்.

இந்த நிலையில் நேற்று (09.06) குறித்த தொலைபேசியினை கண்டெடுத்த கிளிநொச்சி புதுமுறிப்பு கிராமத்தை சேர்ந்த செல்லத்துரை தவக்குமார் என்ற இளைஞன் அதனை உரிமையாளரிடம் கையளித்துள்ளார்.