தற்கொலை செய்து கொள்ள போறேன் : இளம் பெண்ணின் மனதை உருக்கும் கடைசி வார்த்தைகள்!!

552

Message

அமெரிக்காவில் பெண் ஒருவர், தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக, மிக உருக்கமான பேச்சுகள் அடங்கிய வீடியோ ஒன்றை யூடியூப் இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்.

அமெரிக்காவின் கெண்டகி மாநிலத்தை சேர்ந்த மேடி எட்ஸ் (16) என்ற பெண் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக யூடியூப்பில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பின்னர் இதனை பேஸ்புக் மற்றும் டுவிட்டரிலும் பதிவேற்றம் செய்துள்ளார். அந்த வீடியோவில், தான் அனைவரையும் புண்படுத்த போவதாகவும், நீண்ட நாட்களாக மன அழுத்தத்தில் இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், தற்கொலை செய்து கொள்வது தானாக எடுத்த முடிவு என்றும் தெரிவித்துள்ளார். இதனை பார்த்த அவருடைய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

பதிவேற்றம் செய்த ஒருநாளில் 10,000 நபர்கள் பார்த்த பின்பு, குறித்த வீடியோ நீக்கப்பட்டுள்ளது.