காதலனுடன் திட்டம் தீட்டிய மகள் : கொலை செய்து குப்பையில் வீசிய தந்தை!!

786


இந்தியாவில்..இந்தியாவில் மகளை கொன்று உடலை குப்பைத் தொட்டியில் வீசிய தந்தையை போலிஸார் கைது செய்துள்ளனர். கர்நாடகாவின் காகுன்டி கிராமத்தை சேர்ந்தவர் ஷாலினி, 12ம் வகுப்பு படித்துள்ள ஷாலினி பக்கத்து கிராமத்தை சேர்ந்த வாலிபர் ஒருவரை காதலித்து வந்துள்ளார்.இவர்களது காதல் விவகாரம் ஷாலினியின் குடும்பத்துக்கு தெரியவர எதிர்ப்பு தெரிவித்துள்ளனர், இந்நிலையில் காதலனின் பெற்றோர் முறைப்படி வந்து ஷாலினியின் பெற்றோரிடம் பெண் கேட்டுள்ளனர்.
அப்போது ஷாலினியின் பெற்றோர் மறுப்பு தெரிவித்து கடும் வாக்குவாதம் எழுந்துள்ளது, போலிஸ் நிலையம் வரை விவகாரம் சென்றுவிட 18 வயது பூர்த்தி ஆகாத நிலையில் இரு குடும்பத்தாரையும் சமாதானம் செய்து வைத்து போலிசார் அனுப்பி வைத்துள்ளனர்.


இந்நிலையில், ஷாலினி காதலனுடன் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொள்ள முயற்சி செய்துள்ளார். இதனைத் அறிந்து கொண்ட அவரின் பெற்றோர் கடந்த 6ஆம் தேதி இரவு சாலினியை கடுமையாகத் தாக்கி கொலை செய்ததுடன் உடலை குப்பைத் தொட்டியில் வீசியுள்ளனர்.

தொடர்ந்து ஷாலினியின் தந்தை நடந்ததை சம்பவத்தை கூறி காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார், பின்னர் போலிசார் சாலினி உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.