வவுனியாவில் வரலாற்றுச் சிறப்பு மிக்க புதூர் நாகதம்பிரான் ஆலய பொங்கல் விழா!!

2448


புதூர் நாகதம்பிரான்..



வரலாற்றுச் சிறப்பு மிக்க வவுனியா புளியங்குளம் புதூர் நாகதம்பிரான் ஆலய வருடாந்த பொங்கல் விழா இன்று (27.06.2022) காலை தொடக்கம் வெகு சிறப்பாக இடம்பெற்று வருகின்றது.



இதன் போது பக்த அடியார்கள் காலை முதல் தீச்சட்டி ஏந்தியும், அங்க பிரதிஷ்டை செய்தும் தமது நேர்த்திக் கடன்களை நிறைவேற்றினர்.




நாட்டின் பல பகுதிகளிலும் இருந்து பெருமளவான பக்தர்கள் வருகை தந்து பொங்கல் நிகழ்வில் கலந்து வழிபாட்டில் ஈடுபட்டதை காணக்கூடியதாக உள்ளது.


இவர்களுக்காக விசேட பயண ஏற்பாடுகளை இலங்கை போக்குவரத்துச் சபையும் தனியார் போக்குவரத்துச் சபையும் ஏற்பாடு செய்துள்ளன.