நடிகை குஷ்புவின் உடல்நலம் சீரானதால் மீண்டும் நான்கு நாட்கள் அவர் திமுகவிற்காக பிரசாரம் செய்ய உள்ளதாக திமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.
மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து நடிகை குஷ்பு தமிழ்நாடு முழுவதும் தீவிர பிரசாரம் மேற்கொண்டிருந்தார். இந்நிலையில், உடல்நலக் கோளாறு காரணமாக கடந்த சில தினங்களாக அவரது பிரசாரம் ரத்து செய்யப்பட்டதாக கூறப்பட்டது.
தற்போது 4 நாட்கள் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து குஷ்பு மீண்டும் பல்வேறு இடங்களில் தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.