லங்கா ஐஓசி நிறுவனத்தின் முக்கிய அறிவித்தல் : உடன் நடைமுறைக்கு வரும் மாற்றம்!!

1838


லங்கா ஐ. ஓ சி. நிறுவனம்..லங்கா ஐ. ஓ சி. நிறுவனம் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் பெட்ரோல் விற்பனைக்கு கட்டுப்பாடு விதித்துள்ளது. இதன்படி, வாகனங்களுக்கான எரிபொருள் வழங்கல் மீண்டும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.அதற்கமைய, உந்துருளி, முச்சக்கரவண்டி, மகிழுந்து மற்றும் சிற்றூர்திகளுக்கு மட்டுப்படுத்தப்பட்ட தொகைக்கு மாத்திரமே எரிபொருள் வழங்கப்படுமென லங்கா ஐஓசி அறிவித்துள்ளது.
அதற்கமைய, உந்துருளிகளுக்கு அதிகபட்சமாக 1,500 ரூபாவுக்கும், முச்சக்கர வண்டிகளுக்கு அதிகபட்சமாக 2,500 ரூபாவுக்கும், மகிழுந்து, ஜீப் மற்றும் சிற்றூர்திகளுக்கு அதிகபட்சமாக 7,000 ரூபாவுக்கும் மாத்திரமே லங்கா ஐஓசி எரிபொருள் நிலையங்களில் எரிபொருள் வழங்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.


எனினும், பேருந்துகள், பாரவூர்திகள் மற்றும் வணிக வாகனங்களுக்கு இந்த வரையறை பொருந்தாது எனவும் லங்கா ஐஓசி அறிவித்துள்ளது.