வவுனியாவில் பொருளாதார நெருக்கடிக்கு எதிராக கையெழுத்து சேகரிப்பு!!

789


பொருளாதார நெருக்கடிக்கு எதிராக..பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண கோரியும் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராகவும் 25 ஆயிரம் பேரின் கையெழுத்து பெறும் நடவடிக்கை சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பினரினால் முன்னெடுக்கப்பட்டது.கையெழுத்து சேகரிக்கும் குறித்த நடவடிக்பை வவுனியா இலுப்பையடி சந்தியில் இன்று (29.06.2022) காலை 10.00 மணி தொடக்கம் மதியம் வரை இடம்பெற்றிருந்தது.
பட்டினிச்ச் சாவைத் தடுக்க மக்களே முன்வாரீர் எனும் தொனிப்பொருளில் இடம்பெற்ற இக் கையேழுத்து சேகரிக்கும் நடவடிக்கையில் இன, மொழி பேதங்களுக்கு அப்பால் பல மக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு கையெழுத்திட்டிருந்தனர்.