பிறந்த குழந்தையை மருத்துவமனையில் இருந்து தூக்கிச்சென்று க.டித்துக் கொ.ன்.ற நாய்கள்!!

808


இந்தியாவில்..இந்தியாவில் பிறந்து 3 நாட்களே ஆன குழந்தையை மருத்துவமனையிலிருந்து நாய்கள் தூக்கிச் சென்று கடித்து கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்திய மாநிலம் ஹரியானாவில் ஜூன் 25-ஆம் திகதி பானிபட்டில் உள்ள ஹார்ட் அண்ட் மதர் கேர் மருத்துவமனையில் அண்டை மாநிலமான உத்தரபிரதேசத்தில் உள்ள கைரானாவில் வசிக்கும் ஷப்னம் என்பவருக்கு குழந்தை பிறந்தது.
இந்த நிலையில் நேற்றிரவு மருத்துவமனையில் தூங்கிக் கொண்டிருந்த தாய் அருகில் இருந்து பிறந்து 3 நாட்களே ஆன குழந்தையை நாய்கள் தூக்கிச் சென்றன. அங்கு குழந்தியின் பாட்டி மற்றும் அத்தை கூட தூங்கிக் கொண்டிருந்தனர்.


அதிகாலை 2.15 மணியளவில் அவர் காணாமல் போனதை குடும்பத்தினர் கவனித்தனர். பரபரப்பான தேடுதலுக்குப் பிறகு, மருத்துவமனைக்கு பக்கத்தில் உள்ள நிலத்தில் ஒரு நாய் குழந்தையை வாயால் பிடித்துக் கொண்டிருப்பதைக் கண்டனர்.

பின்னர் நாயிடமிருந்து குழ்நதையை மீட்ட குடும்பத்தினர், மருத்துவமனைக்குள் கொண்டு சென்றனர், ஆனால் நாய் கடித்த காயங்களுடன் மருத்துவர்கள் குழந்தை இறந்துவிட்டதாகக் கூறினார்.


தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸார் உடலை பிரேத பரிசோதனைக்காக உள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணையை தொடங்கினர். ஆனால், சம்பவம் குறித்து மருத்துவமனை சார்பிலிருந்து எந்த பதிலும் அளிக்கவில்லை.