வவுனியாவில் இருந்து தமிழகத்தை சென்றடைந்த அகதிகள்!!

1914

தமிழகத்தை சென்றடைந்த அகதிகள்..

இலங்கையில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக வறுமை ஏற்பட்டுள்ள நிலையில் இலங்கையிலிருந்து மேலும் 4 பேர் இன்று(30.06) காலை தமிழகத்தை சென்றடைந்துள்ளனர்.

இந்தியாவின் முக்கிய மாநிலமான தமிழகத்துக்கு கடல் வழியாக இவர்கள் சென்றுள்ளனர். வவுனியா மற்றும் கிளிநொச்சியை சேர்ந்த நால்வரே இவ்வாறு தமிழகத்தை சென்றடைந்துள்ளனர்.

இவர்களில் இரு ஆண்கள், ஒரு பெண் மற்றும் ஒரு சிறுவனும் உள்ளடங்குகின்றனர். இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார செருக்கடி காரணமாக இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு சட்டவிரோதமாக இலங்கை மக்ள் தப்பி செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.