பேஸ்புக்கால் விளைந்த விபரீதக் கொலைகள்!!

325

Facebook

 

இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தில் உள்ள முசாபர்பூரை சேர்ந்த 22 வயதான இளைஞனான வினித் சிங் தன்னை பேஸ்புக் மூலம் இளம்பெண் எனக் கூறி ஏமாற்றிய வயது முதிர்ந்த பெண்ணான ஜோதி கோரியை சுட்டுக்கொன்றுள்ளார்.

தனது பேஸ்புக் சுயவிவர பக்கத்தில் நடிகையின் படத்தை வைத்திருந்த அப்பெண்ணுக்கு ஏற்கனவே திருமணமானது தெரியவந்தது.

ஆத்திரமடைந்த அந்த இளைஞன் அப்பெண்ணை சுட்டுக்கொன்றதுடன் தானும் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். துப்பாக்கியால் சுட்டுகொண்ட நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்த இளைஞன் பின்னர் உயிரிழந்தார்.

தனக்கு 21 வயது என்று கூறிய அப்பெண் 45 வயதானவர் என்பதுடன் மூன்று குழந்தைகளுக்கு தாய் என தெரிந்ததும் அந்த இளைஞன் கடும் அதிர்ச்சியடைந்துள்ளார்.

வேலையில்லாத இளைஞனான வினித்துக்கும் குடும்ப வாழ்க்கையில் கடுப்பாகிப்போன அப்பெண்ணுக்கும் கடந்த 3 வருடங்களாக வலைத்தள தொடர்பு இருந்துள்ளதாக பொலிஸ் கண்காணிப்பாளரான ஹரிநாராயணாச்சாரி மிஸ்ரா கூறினார்.

நீர்பாசன துறையில் வேலை செய்துவரும் அப்பெண்ணின் கணவருக்கும், அப்பெண்ணின் 21 வயது மூத்த மகளுக்கும் கூட தனது தாய் என்ன செய்கிறார் என்பது தெரியவில்லை.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த வினித் தன்னை அப்பெண் இருட்டில் வைத்து ஏமாற்றியதாக தொடரந்து உளறி வந்ததாக அந்த அதிகாரி கூறியுள்ளார்.