தந்தைக்கு மாரடைப்பு… பார்க்க வந்த மகளுக்கு காத்திருந்த துயரம்!!

671

தருமபுரியில்..

மாரடைப்பால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தந்தையை பார்க்க வந்த மகள் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தருமபுரி நகராட்சியில் 50க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இங்கு பணியாற்றும் ஊழியர்களை மேல் அதிகாரிகள் தரக்குறைவாக பேசுவதும், அதிக வேலை பளுகொடுப்பதால் நகாரட்சியில் பணியாற்றும் உழியர்களுக்கு அதிக மன உளைச்சல் ஏற்படுவதாக குற்றசாட்டு எழுந்து வருகிறது.

இந்த நிலையில், நகராட்சி அலுவலகத்தில் வருவாய் ஆய்வாளராக பணி செய்யும் மாதையன் என்பருக்கு நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் அவரை சக ஊழியர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்று மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

மாதையன் மகள் மீனா திருமணமாகி பென்னாகரத்தில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், தந்தை மாதையன் மாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்றதை அறிந்து தந்தையை பார்ப்பதற்கு பைக்கில் வந்த போது, விபத்து ஏற்பட்டது.

படுகாயமடைந்தவரை மீட்டு தருமபுரி அரசு மருத்துவனைக்கு கொண்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு பிறகு மேல்சிகிச்சைக்காக சேலம் மருத்துவனைக்கு கொண்டு செல்லும் போது மீனாஉயிரிழந்தார். இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்கின்றனர்.