ஒரு பெண்ணின் ஒரு நாள் பாக்கெட் மணி 40 லட்சம் : ஆடிப்போன இணையவாசிகள் : அப்படி என்ன செய்கிறார் தெரியுமா?

594

நியூயோர்க்கில் ..

பெற்றோர்கள் சம்பாரிக்கும் பணத்தை வைத்துக்கொண்டு இளம்பெண் செலவு செய்து வீடியோவாக டிக்டாக்கில் வெளியிட்டு பலரையும் வாயடைக்க வைத்திருக்கிறார்.

ஒருவருக்கு வாழ்நாள் கனவு என்று சொன்னால், நாம் சம்பாரிக்கும் பணத்தை சேமித்து பிடித்ததை செய்யவேண்டும் எனவும், சுற்றுலா செல்லவேண்டும் என பல ஐடியா இருக்கும்.

ஆனால், இங்கு ஒரு பெண் செய்திருக்கும் சம்பவம் பலரையும் என்னடா இப்படியும்மா? என ஆச்சரியப்படுத்தி இருக்கிறது.

பாக்கெட் மணி 40 லட்சம்

அமெரிக்காவின் நியூயார்க் பகுதியை சேர்ந்த அந்த இளம் பெண், அன்றாடம் அவர் செய்யும் செயல் தான் தற்போது மிகப்பெரிய பேச்சு. அப்படி என்ன செய்தார் என்றால், டிக் டாக் மூலம் பிரபலமான அந்த பெண் பெயர் ரோமா அப்டெசிலம் (Roma Abdesselam).

இவர், ஒரு நாளுக்கு சுமார் 50 ஆயிரம் டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் 40 லட்சம்) வரை செலவு செய்கிறார். அதாவது தனது பெற்றோர்கள் சம்பாதிக்கும் பணத்தில் இருந்து, சுமார் 40 லட்சம் ரூபாயை பெரும்பாலான நாட்களில், தனது Pocket Money ஆகவும் ரோமா செலவு செய்து வருகிறார்.

டிக்டாக்கில் பிரபலம்
இதுகுறித்து பல வீடியோக்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிட்டு இருக்கிறார். அது மட்டுமின்றி “Stay at home daughter” என்ற பெயரை வைத்து, பெற்றோர்களின் பணத்தை தினமும் செலவு செய்வது தான், தனது முழு நேர வேலை என்றும் ரோமா குறிப்பிட்டுள்ளார்.

அன்றாடம் பல லட்சம் செலவு செய்யும் இவர், உடற்பயிற்சி செல்வது, தோழிகளுடன் ஊர் சுற்றுவது, பார், ரெஸ்டாரண்ட், அழகு நிலையங்கள் செல்வது, உடைகள், அலங்கார பொருட்கள் உள்ளிட்ட பலவற்றை வாங்குவது தான் இவரது பழக்கமாம்.

ஒரு நாள் அணிந்த உடையை மறுமுறை பயன்படுத்தும் பழக்கம் இல்லாத ரோமா, தனது பெற்றோர்கள் செய்யும் வேலை என்ன என்பது பற்றி இதுவரை குறிப்பிடவில்லை.

நெட்டிசன்கள் விமர்சனம்
ஆனாலும், ஆடம்பர செலவு ஒரு பக்கம் இருக்க, மற்ற நாடுகளிலுள்ள கல்வி சார்ந்த தொண்டு நிறுவனங்களுக்கு பணம் நன்கொடை செய்தும் வருகிறார்.

இப்படியே ஒரு நாளைக்கு பல லட்சம் ரூபாய் செலவு செய்வதையே கொண்டுள்ள இப்பெண்ணுக்கு நெட்டிசன்கள் பல விதமான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.