வவுனியாவில் வர்த்தகர் ஒருவர் கைது : வர்த்தக நிறுவனத்திற்கும் சீல்!!

1067

A1வவுனியாவைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

குறித்த வர்த்தகர் வெளிநாடுகளில் உள்ள விடுதலைப் புலிகளின் ஆதரவு அமைப்புகளிடம் இருந்து நிதி பெற்றதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

வவுனியா நகரில் உள்ள இந்த வர்த்தகருக்குச் சொந்தமான வணிக நிறுவனத்தையும் காவல்துறையினர் முத்திரையிட்டு மூடியுள்ளனர்.

இந்த வர்த்தகரின் கைத்தொலைபேசியில் கனடா, இந்தியா, ஏனைய பல நாடுகளில் உள்ளவர்களின் தொலைபேசி இலக்கங்கள் பதிவாகியுள்ளதாக காவல்துறையினர் கூறியுள்ளனர்.

இவர்கள் புலம்பெயர் தமிழர்கள் அல்லது விடுதலைப் புலிகளின் செயற்பாட்டாளர்களினதாக இருக்கலாம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

வெளிநாடுகளில் உள்ள தமிழர்களுடன் தொடர்புகளை வைத்துள்ள மேலும் பல சந்தேக நபர்களை தேடி வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.