இந்திய அணி வீரர் வீரேந்திர ஷேவாக்கிடம் இருந்து நிறைய கற்றுக் கொள்ள வேண்டும் என தென்னாபிரிக்காவின் மில்லர் தெரிவித்துள்ளார்.
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் நட்சத்திர வீரராக ஜொலித்து வருகிறார் தென்னாபிரிக்காவை சேர்ந்த டேவிட் மில்லர்.
இவர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில், எனது கதாநாயகர்களில் வீரேந்திர ஷேவாக்கும் ஒருவர், அவரிடம் இருந்து நிறைய விஷயங்களை கற்றுக் கொள்ள முடியும்.
எந்தவிதமான சூழ்நிலையிலும் பயமின்றி, தைரியமாக விளையாடும் அணுகுமுறையை அவரிடம் இருந்து எனக்குள் கிரகித்துக் கொள்ள விரும்புகிறேன்.
அவர் தன்நம்பிக்கை மிக்க வீரர், மற்றவர்கள் அவரது ஆட்டம் குறித்து என்ன பேசுகிறார்கள் என்பது பொருட்டல்ல என தெரிவித்துள்ளார்.





