இரும்பை விட வலிமையான கண்ணாடி கண்டுபிடிப்பு!!

366

Glass

இரும்பை விட உறுதி மிக்க, எளிதில் உடையாத கண்ணாடியை அமெரிக்க விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். அமெரிக்காவின் யேல் பல்கலைக்கழக விஞ்ஞானிகளே இந்த கண்ணாடியை உருவாக்கியுள்ளனர்.

இதுகுறித்து விஞ்ஞானிகள் குழு தலைவர் ஜான் ஸ்கோர்ஸ் கூறுகையில், வளையும் தன்மையுடன் இரும்பை விட வலிமையான இந்த தாதுவுக்கு பல்க் மெட்டாலிக் கிளாஸ் (பி.எம்.ஜி) என பெயரிடப்பட்டுள்ளது.

இந்த புதிய கண்ணாடியைக் கொண்டு உடையாத மருத்துவ உபகரணங்கள், மொபைல் போன் மற்றும் எலக்ட்ரோனிக்ஸ் பொருட்களை தயாரிக்கலாம்.

கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் 1.20 லட்சம் கலவை தாதுக்கள் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.