கழிவறையில் 10 நிமிடங்களுக்கு அதிகமாக உட்கார்ந்திருந்தால் இவ்வளவு பிரச்சினையா?

799


கழிவறையில்..கழிவறையில் உட்கார்ந்து கொண்டு செல்போன் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகமாகிவிட்டது என கூறினால் அது மிகையாகாது!இப்படி கழிவறையில் வெகுநேரம் உட்கார்ந்து கொண்டு செல்போன் பயன்படுத்துவதால் உடலில் என்னென்ன மாறுதல்கள் ஏற்படும்?
கழிப்பறையில் அதிகபட்சம் 10ல் இருந்து15 நிமிடங்கள் வரை அமர்ந்திருக்கலாம். அதை விட அதிக நேரம் செலவிடுவது உங்கள் மலக்குடலில் தேவையற்ற அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. இதோடு மூல நோய் பிரச்சனைக்கும் வழிவகுக்கும். அதைத் தொடர்ந்து மலக்குடல் சரிவு ஏற்படுகிறது.

கெட்ட கழிவுகளை வெளியேற்றும் இடம்:


கழிவறை என்பது நம்முடைய உடலில் உள்ள கெட்ட கழிவுகளை வெளியேற்றும் இடமாக இருக்கிறது. கழிவறையில் பொதுவாக அதிக அளவிலான பாக்டீரியாக்களும் உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் கிருமிகளும் இருக்கும்.

அங்கு செல்போனை நீண்ட நேரம் பயன்படுத்தும் போது, அவை செல்போன் ஸ்கிரீனில் படிந்து விடும். பிறகு நீங்கள் வெளியே வரும்போது சோப்பு போட்டு கைகளைக் கழுவினாலும், போனில் ஒட்டிக் கொண்டிருக்கும்.


கழிவறையில் அதிக நேரம் அழுத்தமாக அமர்ந்திருக்கும்போது இரைப்பை மற்றும் பெருங்குடல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். இப்படி அதிக நேரம் கழிவறையில் உட்கார்ந்திருப்பதுவே கூட நிம்மதியாக மலம் கழிக்க முடியாமல் மலச்சிக்கலை ஏற்படுத்தக்கூடும்.

தொடர்ச்சியாக கழிவறைக்குள் செல்போன் பயன்படுத்துபவர்கள் பெரும்பாானோர் இடுப்பு வலியால் அவதிப்படுவார்கள். காரணம், நம்முடைய இடுப்பு உயரத்துக்கும் தரைக்கும் இடைபட்ட உயரத்தில் கழிவறை இருக்கை இருக்கும்.