7 வயது இரட்டைப் பிறவிகளின் துணிச்சலான செயல்!!

308

Twin

அமெரிக்காவில் தங்களது தம்பியை கடத்தி சென்ற கடத்தல்காரனை 7 வயது மதிக்கத்தக்க சிறுவர்கள் இருவர் அடித்து விரட்டிய சம்பவம் நடந்துள்ளது.

அமெரிக்காவின் டெக்சஸ் மாநிலத்தை சேர்ந்த 7 வயது இரட்டை பிறவிகள் லூயிஸ் மற்றும் லூசியஸ். இவர்கள் தங்களது 1 வயது தம்பியுடன் வீட்டுக்கு வெளியே காரில் அமர்ந்திருந்தனர்.

அப்போது அவர்களை 30 வயது கடத்தல்காரன் ஒருவர் காருடன் கடத்தி சென்றுள்ளான், கடத்தல்காரனை காலால் உதைத்தும், பாம்பு பொம்மையால் அடித்தும் துன்புறுத்தியுள்ளனர்.

சிறுவர்களின் அட்டகாசம் தாங்காத திருடன், சிறுவர்களை காருடன் 10 மைல் தொலைவில் உள்ள வீதியில் விட்டுவிட்டுச் சென்றுள்ளான்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த பொலிசார், சிறுவர்களை மீட்டுள்ளனர். அத்துடன் துணிச்சலுடன் செயல்பட்ட சிறுவர்களையும் பாராட்டிவிட்டு சென்றுள்ளனர்.