போராட்டம்..

கோட்டா – ரணில் அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வவுனியாவிலும் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பின் ஏற்பாட்டில் வுனியா பழைய பேரூந்து நிலையம் முன்பாக குறித்த போராட்டம் இன்று (09.07) இடம்பெற்றது.

வவுனியா, பூந்தோட்டம் சந்தியில் இருந்து கறுப்பு கொடிகளுடன் கோட்டா – ரணில் அரசாங்கத்திற்கு எதிராக கோசங்களை எழுப்பியவாறு துவிச்சக்கர வண்டியில் வந்த ஆர்ப்பாட்டக்காரர்கள், பழைய பேரூந்து நிலையம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவாகவும், கொழும்பில் நடைபெறும் போராட்டத்திற்கு ஆதரவாகவும் மடுகந்தை மற்றும் ஈரப்பெரியகுளம் ஆகிய பகுதிகளில் இருந்தும் ஊர்வலமாக வருகை தந்த மக்கள் குறித்த போராட்டக்காரருடன் இணைந்து அரசாங்கத்திற்கு எதிராக கோசம் எழுப்பினர்.

குறித்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், ‘பொருளாதார நெருக்கடிக்கு தீர்வை முன் வை, அத்தியாவசிய உணவுப் பொருட்களை கொண்டு வா, நிறுத்து நிறுத்து விலையுயர்வை நிறுத்து,

உழைக்கும் மக்களை பட்டினி போடாதே, கடனுக்குள் தள்ளியோர் உல்லாச வாழ்வு நாட்டு மக்கள் பட்டினச் சாவு, விவசாயிகளை வாழவிடு, கோட்டா – ரணில் வீட்டுக்கு போ’ என கோசங்களை எழுப்பியிருந்தனர்.

பிரதமர் இல்லத்தின் மதில் சுவரின் ஊடாக உள்நுழைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள்





