புதிய முயற்சியில் அனுஷ்கா!!

512

anuska

அனுஷ்காவின் தாய் மொழி கன்னடம் என்றாலும் அத தவிர தமிழ், தெலுங்கு என இரு மொழியிலும் நடித்து வருகிறார். நடிப்பில் எந்த விதமான கரக்டராக இருந்தாலும் சரி, கிளாமர் ரோல் அல்லது ஆன்மீக கதாபாத்திரம் என்றாலும் சரி ஒரு கை பார்த்துவிடுவார்.

தற்போது கூட எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் பாஹுபலி படத்திலும், குணசேகர் இயக்கத்தில் ருத்ரம்மாதேவி படத்திலும் வரலாற்று சிறப்பு வாய்ந்த கரக்டரில் நடித்துக் கொண்டிருக்கிறார் அனுஷ்கா.

அதற்காக குதிரையேற்றம், வாள் சண்டை என பலவற்றையும் கற்றுத் தேர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறார்.
இதுவரை தமிழில் எட்டு படங்களில் நடித்திருக்கும் அனுஷ்கா ஒரு படத்தில் கூட தன் குரலுக்கு டப்பிங் செய்யவில்லையாம்.

தனது கதாபாத்திரம் எதுவாக இருந்தாலும் சவாலாக நடித்து வரும் அனுஷ்கா, தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிக்கும் படத்தில் முதன் முதலாக தனது குரலால் டப்பிங் செய்ய இருக்கிறார்.