யாழ். கொலை வழக்கில் சந்தேக நபர்கள் 5 பேருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்!!

645

Amalrajவட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி மைதானத்தில் வைத்து இளைஞன் ஒருவனை அடித்துக் கொலை செய்யத சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள எட்டுப் பேரையும் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

சென்பற்றிக்ஸ் கல்லூரியின் பழைய மாணவன் அமலன் என்பவர் அடித்துக் கொலை வழக்கு நேற்று மல்லாகம் நீதவான் நீதிமன்றில் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது.

விசாரணைக்கு எடுத்துக் கொண்ட மேலதிக நீதவான் ஜோய் மகிழ்மகாதேவா, சந்தேக நபர்கள் எண்மரையும் எதிர்வரும் 5ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

கடந்த மாதம் 13ஆம் திகதி டர்ஷன் அமலன் மைதானத்தில் வைத்து அடித்துக் கொலை செய்யப்பட்டார். சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸாரினால் 8 பேர் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்தப்பட்டு எண்மரில் ஐவர் அடையாளங்காட்டப்பட்டுள்ளனர். அதன்படி அடையாளம் காட்டப்பட்ட ஐவர் உட்பட 8 பேரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.