
இந்திய அணியின் துடுப்பாட்டக்காரரான தினேஷ் கார்த்திக் தனது வருங்கால மனைவி தீபிகா வருகையால் தனக்கு அனைத்தும் நன்றாக நடப்பதாக தெரிவித்துள்ளார்.
தினேஷ் கார்த்திக் மற்றும் இந்திய ஸ்குவாஷ் நட்சத்திரம் தீபிகா பல்லீகலுக்கும் உள்ள காதல் அனைவரும் அனைவரும் அறிந்த ஒன்றே. இருவருக்கும் நிச்சயம் செய்துள்ள நிலையில், விரைவில் திருமணம் நடக்கவுள்ளது.
இதனிடையே, இந்திய அணியில் இடம் கிடைக்காமல் தவித்து வந்த தினேஷ் கார்த்திக், ஐ.பி.எல்., நிர்வாகத்தால் டெல்லி அணியில் 12.5 கோடிக்கு வாங்கப்பட்டார். இது பற்றி அவர் கூறுகையில், தீபிகா பல்லீகல் தனது வாழ்க்கையில் வந்த பின், எல்லாமே நல்லதாகவே நடக்கிறது.
பெங்களூரு அணிக்கு எதிரான முதல் போட்டியில், அணித்தலைவர் அந்தஸ்தும் தேடி வந்தது என்று தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.
வரும் மே மாதம் இங்கிலாந்து சென்று இங்கிலாந்து ஓபன் ஸ்குவாஷ் தொடரில் பங்கேற்கவுள்ள தீபிகா இதற்கு முன் கிடைத்த நேரத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வந்து இங்கு நடக்கும் அனைத்து ஆட்டங்களையும் பார்க்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.





