8 ஆண்டுக்கு முன் பிரிந்த நாய்… 1900 கி.மீ பயணம் செய்து மீண்டும் சேர்ந்த பெண்!!

1590

அமெரிக்காவில்..

1900 கிலோ மீட்டர் பயணம் செய்து 8 ஆண்டுக்கு பின் செல்ல நாயுடன் இளம்பெண் இணைந்த சம்பவம் சுவாரசியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அமெரிக்காவை சேர்ந்த பெட்சி டிஹான் என்ற பெண் காணாமல் போன நாயுடன் மீண்டும் இணைவதற்காக 1900 கிலோமீட்டர் பயணம் செய்திருக்கிறார்.



கடந்த 2013ம் ஆண்டில் ஃப்ளோரிடாவில் வசித்து வந்த பெட்ஸி பிட் புல் நாய் ஒன்றை தத்தெடுத்து வளர்த்தி வந்துள்ளார். அதற்கு ஹார்லி என்று பெயரிட்டார். இதனையடுத்து, பெட்ஸி 2014ம் ஆண்டு அதனைத் தவறவிட்டார். அதன் பின் போஸ்டர் ஒட்டுவது முதல் விளம்பரம் கொடுப்பது வரை பல வகைகளில் அதனைத் தேடிப்பார்த்திருக்கிறார்.

8 வருடத்திற்கு முன் தொலைந்த நாய்
ஆனால் அந்த நாய் கிடைக்கவில்லை. இதனால் நம்பிக்கை இழந்த அவர், கொஞ்சம் கொஞ்சமாக இழந்த மிசூரி மாகாணத்துக்குக் குடி பெயர்ந்தார். அதன் பிறகு பெட்ஸி வேறு எந்த நாயும் வளர்க்கவில்லை.

இந்நிலையில், கடந்த ஜூலை 2ம் தேதி பெட்ஸிக்கு Lee County Domestic Animal Services-ல் இருந்து ஒரு அழைப்பு வந்திருக்கிறது. பல நாட்கள் வெட்டப்படாத அதிக நீளமான நகங்களைக் கொண்ட பிட் புல் ஒன்றை அவர்கள் கண்டுபிடித்ததாகக் கூறியுள்ளனர்.

மேலும், அதன் தோலிலிருந்த மைக்ரோசிப் மூலம் அதன் உரிமையாளர்களைக் கண்டறிந்து பெட்ஸிக்கு அழைத்ததாக அவர்கள் கூறியதும், உற்சாகமடைந்த பெட்ஸி உடனடியாக மிசூரியில் இருந்து ஃப்ளோரிடாவுக்கு காரில் பயணம் செய்துள்ளார்.

சுமார் 1900 கிலோ மீட்டர் பயணம் மேற்கொண்டு ஹார்லியுடன் மீண்டும் இணைந்தார் பெட்ஸி. 8 வருடங்கள் கழித்து மீண்டும் தனது செல்ல நாயுடன் இணைந்த பெட்ஸி அது மெலிந்திருப்பதைப் பார்த்து வருந்தியிருக்கிறார்.

கிடைத்தது எப்படி?


மேலும், ஹார்லி மீண்டும் சேர உதவியாக இருந்த மைக்ரோ சிப் ஒரு அரிசி அளவு இருக்கும் கருவியாகும். இதனை நாயின் தோலில் பொருத்திவிட்டால் வாழ்நாள் முழுவதும் நாயின் உடலில் இருக்கும். இதில் உரிமையாளரின் விவரங்கள் இருக்கும். நாயைக் காண்பவர்கள் மீண்டும் உரிமையாளரிடம் கொண்டு சேர்க்க இதைப் பயன்படுத்துகிறார்கள்.