முகநூல் காதல் : காதலியை தேடிச் சென்றவருக்கு ஏற்பட்ட விபரீதம்!!

1413

முகநூலில்..

முகநூலில் பழக்கமான காதலியை பார்க்க நேரில் சென்ற காதலன் காணாமல் போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் கிரண்.



இவருக்கும் ஆழிமலை பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கும் முகநூல் வழியாக பழக்கம் ஏற்பட்டு இருக்கிறது. இது நாளடைவில் காதலாக மாறியுள்ளது. பிறகு அவ்வப்போது பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.

முகநூல் வழியாக பழக்கம் ஏற்பட்ட பெண்ணை சந்திக்க சென்றுள்ளார் கிரண். அந்த பெண்ணின் வீடு அருகே சென்றதாக கூறப்படுகிறது. பெண்னின் சகோதரர் மற்றும் பலர் சேர்ந்து அவரை அடித்து இழுத்து சென்றதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் இரையுமன்துறை கடற்கரை பகுதியில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் ஒன்று உடல் முழுவதும் சிதைந்த நிலையில் கரை ஒதுங்கி உள்ளது.

இதனை அந்த பகுதியில் உள்ள மீனவர்கள் பார்த்து நித்திரவிளை போலீசாருக்கு தகவல் தெரிவித்து உள்ளனர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நித்திரவிளை போலீசார் உடலில் முகம் முழுவதும் சிதைந்து இருந்ததால் இறந்தவர் யார் என்று அடையாளம் காண்பதில் சிரமம் அடைந்தனர்.

மேலும் கடலோர காவல்படை படையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடம் வந்த கடலோர காவல்படையினர் கரை ஒதுங்கிய ஆண் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இறந்த நபர் யார் என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். ஒருவேளை அந்த உடல் கிரணுடையதாக இருக்குமோ ? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.