ஒரு வருடமாக வாயை திறக்காமல் அரியவகை நோயினால் அவதிப்படும் குழந்தை!!

268

கனடாவில் பிறந்த குழந்தையொன்று மிக அதிசயத்தக்க வகையில், ஒரு வருடமாக வாயை திறக்க முடியாத நோயினால் அவதிப்பட்டு கொண்டிருக்கிறது.

கனடாவின் ஒன்ராறியோவை சேர்ந்த தம்பதிகள் Andrew and Amy. இவர்களுக்கு கடந்த 10 மாதங்களுக்கு முன்னர் அழகான ஆண் குழந்தையொன்று பிறந்தது.

குழந்தை பிறந்து பல மணிநேரங்கள் ஆகியும் அழவில்லை, உடனே குழந்தையை பரிசோதித்து பார்த்த போது தான் தாடை அசையாமல் இருந்தது தெரியவந்தது. இதனால் குழந்தையால் தன்னுடைய வாயை திறக்க முடியவில்லை.

உலகின் மிகச்சிறந்த மருத்துவர்களை சந்தித்தும், குழந்தையின் பிரச்னையை சரிசெய்ய முடியவில்லை.

இதுகுறித்து ஒன்ராறியோவின் மருத்துவர் Dr J P Vaccani, உலகில் இம்மாதிரியான குறையுடன் இதுவரை எந்த குழந்தையும் பிறந்ததில்லை என்றும், இதுதான் முதல் குழந்தை எனவும் கூறியுள்ளார்.

இதற்கிடையே குழந்தையின் பெற்றொர் இதற்கான தனியாக இணையத்தளம் ஒன்றை ஆரம்பித்து, இந்த குறையை சரிசெய்யக்கூடிய ஆலோசனைகள் வழங்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.

B1 B2 B3