காதலிக்க எனக்கு நேரம் இல்லை : தமன்னா!!

476

Tamana

நடிகை தமன்னா தமிழில் பாஸ் என்கிற பாஸ்கரன் இரண்டாம் பாகத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். மேலும் தமிழ், தெலுங்கில் தயாராகும் பாகுபலி மற்றும் இரண்டு தெலுங்கு படங்களிலும் நடிக்கிறார்.

தமன்னா காதல் வயப்பட்டுள்ளதாக தொடர்ந்து கிசுகிசுக்கள் வந்த வண்ணம் உள்ளன. இதற்கு பதில் அளித்து ஐதராபாத்தில் தமன்னா அளித்த பேட்டி வருமாறு..

நான் காதலிப்பதாக வதந்திகள் பரவி உள்ளன. இதில் உண்மை இல்லை. யாரையும் இதுவரை காதலிக்கவில்லை. எனக்கு காதலிப்பதற்கு நேரம் இல்லை. படங்களில் பிசியாக நடித்துக் கொண்டு இருக்கிறேன். படப்பிடிப்புக்காக ஊர், ஊராக பறக்கிறேன்.

என் திருமணத்தை முடிக்க வீட்டில் இருப்பவர்கள் மாப்பிள்ளை பார்க்கலாம். ஆனால், திருமணத்துக்கு நான் தயாராக இல்லை. சில வருடங்கள் கழித்த பிறகே திருமணம் பற்றி யோசிப்பேன். இப்போது எனது முழு கவனமும் சினிமாவில்தான் இருக்கிறது என்று தமன்னா கூறினார்.