சிறுநீரை அடக்குவதால் ஏற்படும் ஆபத்துக்கள் என்ன தெரியுமா?

2233


சிறுநீர்..பொதுவாக நம்மில் பலர் அடிக்கடி செய்யும் தவறுகளில் ஒன்று தான் சிறுநீரை அடக்குவது. நீண்ட நேரம் சிறுநீர் கழிக்காமல் இருந்தால், ஒருவித அசௌகரியத்தை உணரக்கூடும். மேலும் அடிவயிற்றில் சிறுநீர்ப்பை உள்ள இடத்தில் கடுமையான வலியை சந்திக்க நேரிடும்.அதுமட்டுமின்றி இது பல ஆபத்துகளை ஏற்படுத்தும் என்று கூறப்படுகின்றது. அந்தவகையில் சிறுநீர் அடக்குவதால் ஏற்படும் பிரச்சினை என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.
வெகுநேரம் சிறுநீரை அடக்கினால், சிறுநீர்ப்பை நிறைந்து, பின் சிறுநீர்ப்பையில் தீவிர நோய்த்தொற்றுகள் ஏற்படக்கூடும். சிறுநீரை அடக்குவதால் சிறுநீர்ப்பையில் அழுத்தம் அதிகரித்து, தாங்கும் திறன் இழக்கப்பட்டு, அதுவே நாளடைவில் உடல் முழுவதும் சிறுநீரில் உள்ள நச்சுக்களை பரவச் செய்து உடலில் பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தும்.


சிறுநீரை அடக்குவதால் இடுப்பு மடி தசைகள் பலவீனம் அடையும், அதனால் உடல் எடையை இழக்க நேரிடும். சிறுநீரை அடக்கி வைத்தால் அடிவயிற்றில் வலி ஏற்பட்டு, கவனச்சிதறல் மேலும் ஒற்றைத் தலைவலி வரை ஏற்படும்.