விவாகரத்து நோட்டீஸ் அனுப்பிய கணவர் : மனமுடைந்த இளம்பெண் எடுத்த விபரீத முடிவு!!

1784

மயிலாடுதுறையில்..

கணவர் விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியதால் மனமுடைந்த மனைவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கொள்ளிடம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.



மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் அருகே மயிலக்கோயில் கிராமத்தைச் சேர்ந்தவர் குணசேகரன். இவர் மகள் இலக்கியா (வயது 28). இலக்கியாவுக்கும், கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த அன்புதாசன் என்பவரின் மகன் பாண்டியராஜனுக்கும் மூன்றாண்டுகளுக்கு முன்பு திருமணமானது. இந்தத் தம்பதிக்கு 2 வயதில் பெண் குழந்தை ஒன்று இருக்கிறது. திருமணமானதிலிருந்து கணவன்-மனைவியிடையே வரதட்சணைப் பிரச்னை இருந்துவந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், பாண்டியராஜன் வெளிநாடு சென்றுவிட்டு கடந்த ஏப்ரல் மாதம் கள்ளக்குறிச்சியிலுள்ள அவரின் சொந்த வீட்டுக்குத் திரும்பினார். இருவருக்குமிடையே மீண்டும் வரதட்சணை தொடர்பாக அடிக்கடி சண்டை ஏற்பட்டுவந்தது. இந்த நிலையில், “கிரகக் கோளாறு.

அதனால்தான் பிரச்னை வருது. சிலநாள்கள் உங்க வீட்டில் இரு. எல்லாம் சரியாகிடும். நான் வந்து அழைச்சுக்கிறேன்” என்று இலக்கியாவின் கணவர் அவரிடம் கூறினாராம்.அதனால், இலக்கியா மயிலக்கோயில் கிராமத்திலுள்ள தன் தாய் வீட்டுக்கு குழந்தையுடன் கடந்த 10-ம் தேதி வந்தார்.

பைக்குக்கு பெற்றோல் இல்லை திடீரேன கரண்ட் இல்லை சோக கதை தெரியுமா