வயிற்று வலியால் துடித்த மாணவி : மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

1709

புதுச்சேரியில்..

புதுச்சேரியில் மாணவியை ஏமாற்றியவாலிபரை, போலிஸார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.



புதுச்சேரி உறுவையாரு பகுதியை சேர்ந்த 10 ஆம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால் அவரது பெற்றோர் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

அப்போது மாணவியை பரிசோதனை செய்தபோது அவர் கர்பமாக இருப்பது தெரியவந்தது. இது குறித்து பெற்றோர் விசாரணை செய்ததில், முருகன் என்ற வாலிபரே இதற்கு காரணம் என தெரிவித்துள்ளார்.

இதையடுத்து முருகன் மீது காவல்நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்தனர். இதில் மாணவியிடம் ஆசை வார்த்தைகளை கூறி வன்கொடுமை செய்தது தெரியவந்தது. பின்னர் போலிஸார் முருகனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த விசாரணை நடத்தி வருகின்றனர்.