இலங்கை கிரிக்கெட் அணி பயிற்றுவிப்பாளர் திடீர் ராஜினாமா!!

564

SLC

இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் பிரதான பயிற்றுவிப்பாளர் போல் பார்பிரேஸ் (Paul Farbrace) தனது பதவி விலகல் கடிதத்தை சமர்பித்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் சற்று நேரத்திற்கு முன்னர் உறுதி செய்துள்ளது.

இங்கிலாந்து அணியின் உதவி பயிற்றுவிப்பாளராக இவர் பொறுப்பேற்கவுள்ளதாகவும் அதனாலேயே இலங்கையை விட்டு செல்வதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த சில நாட்களாக இங்கிலாந்தில் தங்கியிருந்த போல் பார்பிரேஸ் நேற்றைய தினமே இலங்கை வந்தார். இந்நிலையில் அவர் மீண்டும் இங்கிலாந்து செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, நேற்று மாலை கூடிய இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் ஒழுக்காற்று குழு கடந்த ஏப்ரல் 8ம் திகதி கட்டுநாயக்க விமான நிலையத்தில் மஹேல மற்றும் சங்கா வெளியிட்ட கருத்துக்கள் மற்றும் பரிந்துரைகள் தொடர்பில் பரிசீலனை செய்வது என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.