வவுனியாவில் அத்தியாவசிய தேவைகளுக்காக கொள்கலன்களில் 1000 லீற்றர் பெற்றோல் வழங்கி வைப்பு!!

1464

பெற்றோல்..

வவுனியாவில் அத்தியாவசிய தேவைகளுக்காக ஆயிரம் லீற்றர் பெற்றோல் மாவட்ட செயலகத்தின் சிபார்சில் ஐஓசி எரிபொருள் நிரப்பு நிலையத்தால் வழங்கப்பட்டுள்ளது.

வவுனியா, பண்டாரவன்னியன் சதுக்கம் பகுதியில் உள்ள ஐஓசி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்று (18.07) பெற்றோல் எரிபொருள் விநியோகம் இடம்பெற்றது.

இதன்போது, வவுனியா மாவட்ட செயலகத்தின் சிபார்சில் 4 பிரதேச சபைகள் மற்றும் ஒரு நகரசபை உள்ளடங்கிய உள்ளுராட்சி மன்றங்களுக்கு 400 லீறறர், தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபைக்கு 400 லீற்றர் பெற்றோல், கமலநல சேவைகள் திணைக்களத்திற்கு 200 லீற்றர் பெற்றோல் என 1000 லீற்றர் பெற்றோல் வழங்கி வைக்கப்பட்டது.

அத்துடன் சனிக்கிழமை உள்ளுராட்சி மன்றங்களுக்கு 400 லீற்றரும், வங்கிகளுக்கு 250 லீற்றர், சிறைச்சாலை திணைக்களத்திற்கு 250 லீற்றர் என 900 லீற்றர் பெற்றோல் வழஙகி வைக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் கடந்த மூன்று தினங்களில் 1900 லீற்றர் அத்தியாவசிய தேவை நிறுவனங்களுக்கு என மாவட்ட செயலகத்தால் எரிபொருள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட செயலகத்தினர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, குறித்த சிபார்சு தவிர்ந்த மேலும் பலர் குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கொள்கலனில் பெற்றோல் பெற்றுச் சென்றதையும் அவதானிக்க முடிந்தததாகவும், இதன் காரணமாக தாம் எரிபொருள் பெற முடியாது தொடர்ந்து வீதியில் நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

பைக்குக்கு பெற்றோல் இல்லை திடீரேன கரண்ட் இல்லை சோக கதை தெரியுமா