வவுனியாவில் இரு வாரங்களில் 10 க்கும் மேற்பட்ட துவிச்சக்கர வண்டிகள் திருட்டு!!

2156

துவிச்சக்கர வண்டிகள் திருட்டு..

வவுனியாவில் இரு வாரங்களில் 9 துவிச்சக்கர வண்டிகள் திருடப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். வவுனியாவில் கடந்த சில வாரங்களாக துவிச்சக்கர வண்டிகளின் திருட்டு அதிகரித்துள்ளது.

எரிபொருள் வரிசை, வைத்தியசாலைப் பகுதி, நகரப் பகுதி என்பவற்றில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள துவிச்சக்கர வண்டிகளே இவ்வாறு திருடப்பட்டுள்ளன.

இந்நிலையில், வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரி வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த துவிச்சக்கர வண்டி ஒன்று திருடப்படும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

இதனை அடிப்படையாகக் கொண்டு வவுனியா பொலிசார் விசாரணைகளை முனனெடுத்துள்ளனர். இதேவேளை, எரிபொருள் நெருக்கடி காரணமாக துவிச்சக்கர வண்டிகளின் விலையும் பாரியளவில் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் இரு வாரங்களில் 9 துவிச்சக்கர வண்டிகள் திருட்டு