இலங்கையர்களுக்கு லிபியாவிற்கு செல்லத் தடை!!

669

Libiyaலிபியாவிற்கு இலங்கைப் பணியாளர்களை அனுப்பி வைக்கும் நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டுள்ளது. தற்காலிக அடிப்படையில் பணியாளர்களை அனுப்பும் நடவடிக்கை இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.

லிபியாவில் தற்போது நிலவி வரும் நிலைமைகளின் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் அறிவித்துள்ளது.

வெளிவிவகார அமைச்சின் தகவல்களையும் பெற்றுக் கொண்டே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

இதன்படி, தனிப்பட்ட ரீதியிலோ அல்லது வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர் நிறுவனங்களின் ஊடாகவோ லிபியாவிற்கு இலங்கையிலிருந்து வேலை வாய்ப்பு பெற்றுச் செல்லும் நடவடிக்கைகள் இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளன.