பண்ருட்டி அருகே..
பண்ருட்டி அருகே தூங்கி கொண்டு இருந்த 14 வயதுடைய மகன் மீது தந்தை குழவிகல்லை தூக்கி போட்டு கொலை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த பகுதியைச் சேர்ந்தவர் முருகன் (வயது 38). இவருக்கு மனைவி ஒருமகன் இரண்டு மகள் உள்ளனர்.
இவர் அதே பகுதி சேர்ந்த சேகர் என்பவருக்கு சொந்தமான செங்கல் சூலையில் கல் அறுக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். மகன் அர்ஜுன் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார்.
குடிபழக்கத்திற்கு அடிமையான முருகன், கடந்த சில நாட்களாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து கொண்டு மனைவியிடம் மது குடிப்பதற்கு பணம் கேட்டு அடிக்கடி தொந்தரவு செய்து வந்ததாக கூறப்படுகிறது.
நேற்று இரவு மது போதையில் இருந்த முருகன் மீண்டும் மது அருந்த பணம் கேட்டு மனைவி சுமதியை அடித்ததாகவும் அதன் பின்பு வீட்டில் வைத்திருந்த 300 ரூபாய் பணத்தை எடுத்துக் கொண்டு சென்றுள்ளார்.
இரவு சென்ற முருகன் மீண்டும் நள்ளிரவுவில் குடிபோதையில் வீட்டுக்கு வந்து மனைவி என்று நினைத்து 14 வயதுடைய மகன் அர்ஜுன் தலையில் குழவிகல்லை தூக்கி போட்டு கொலை செய்துள்ளார். சத்தம் கேட்டு தாய் சுமதி மற்றும் சகோதரிகள் எழுந்து பார்க்கும் போது அர்ஜுன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலே துடிதுடித்து உயிரிழந்துள்ளார்.
உடனடியாக சம்பவம் குறித்து புதுப்பேட்டை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து உயிரிழந்த சிறுவன் அர்ஜுனை மீட்டு உடற்கூறு ஆய்வுக்கு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பித்துள்ளனர். மேலும் பெற்ற மகனை மது போதையில் கொலை செய்த தந்தை மீது போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
வவுனியாவில் இரு வாரங்களில் 9 துவிச்சக்கர வண்டிகள் திருட்டு