மனைவி ஒன்றும் பணம் கொடுக்கும் ஏடிஎம் இல்லை.. கணவரிடம் இருந்து விவாகரத்து வழங்கிய நீதிமன்றம்!!

590

கர்நாடகாவில்…

மனைவியிடம் அதிகளவில் பணம் கேட்டு வந்த கணவரிடம் இருந்து அவருக்கு விவாகரத்து வழங்கி கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. மனைவி என்பவர் பணம் கொடுக்கும் ஏடிஎம் அல்லது பணம் வழங்கும் பசு இல்லை என நீதிமன்றம் கருத்து தெரிவித்து உள்ளது.

கர்நாடகத்தை சேர்ந்தவர் 53 வயது ஆண். இவரது மனைவிக்கு 42 வயது ஆகிறது. இவர்கள் 2 பேரும் 1999ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு 2001ல் பெண் குழந்தை பிறந்தது. இதற்கிடையே கணவருக்கு கடன் பிரச்சனை இருந்தது. இதனால் தம்பதி இடையே அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு வந்தது.

மேலும் கணவரால் தான் வாங்கிய கடனை அடைக்க முடியவில்லை. இதனால் குடும்பத்தில் நிதி நிலைமை மோசமானது. இதையடுத்து அவரது மனைவி வேலைக்கு செல்ல திட்டமிட்டார். ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சென்ற மனைவி வங்கி ஒன்றில் பணிக்கு சேர்ந்து வேலை செய்து வந்தார். மேலும் தனது கணவரின் கடனையும் செலுத்தி வந்தார். அதோடு வருமானம் மூலம் தனது மற்றும் மகளின் எதிர்காலத்தை கொண்டு சொத்துக்கள் வாங்க துவங்கினார்.

சலூன் கடை வைத்து நஷ்டம் மேலும் தனது கணவர் கேட்ட கொண்டதன் அடிப்படையில் அவருக்கு ஐக்கிய அரபு எமிரேட்சில் சலூன் கடை வைத்து கொடுத்தார். இதனையும் அவரது கணவர் சரியாக நிர்வகிக்கவில்லை. இதனால் அவருக்கு மீண்டும் நஷ்டம் ஏற்பட்டது. மேலும் ஐக்கிய அரபு எமிரேட்சில் இருந்து இந்தியா திரும்ப விருப்பம் தெரிவித்து அவர் தாய்நாட்டுக்கு வந்தார்.

ஏடிஎம் கார்டு போல் மனைவி மேலும் மனைவியிடம் அவரது கணவர், குடும்பத்தினர் தொடர்ந்து பணம்கேட்டு வந்தனர். இதனால் அவர் மனம் உடைந்தார். மேலும் தன்னை கணவரின் குடும்பத்தினர் ஏடிஎம் கார்டு போன்று பணத்துக்காக மட்டுமே பயன்படுத்துவதை அவர் உணர்ந்தார். இதனால் கணவரிடம் இருந்து விவாகரத்து கோர விரும்பினார்.

விவாகரத்து கோரி வழக்கு இதையடுத்து அவர் விவாகரத்து கோரி குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில் தனது கணவருக்காக ரூ.60 லட்சம் செலவழித்ததாகவும், தொடர்ந்து தன்னிடம் பணம் கேட்பதால் மிகுந்த மனவேதனை அடைந்துள்ளதாக கூறி விவாகரத்து பெற விரும்புவதாக 2017ல் குடும்பநல நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் கேட்டார்.

இதனை விசாரித்த குடும்ப நல நீதிமன்றம் விவாகரத்துக்கான காரணத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. இதையடுத்து விவாகரத்து வழங்க மறுத்தது. விவாகரத்து வழங்கிய உயர்நீதிமன்றம் இதனை எதிர்த்து அவர் பெங்களூரில் உள்ள கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மனு நீதிபதி அலோக் ஆராதே மற்றும் நீதிபதி ஜேஎம் காசி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் இந்த அமர்வு குடும்ப நல நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்து கணவரிடம் இருந்து மனுதாரரான மனைவிக்கு விவாகரத்து வழங்கி உத்தரவிட்டுள்ளது. உயர்நீதிமன்றம் கூறியது என்ன? மேலும் மனைவியின் கூற்றுப்படி அவரது கணவர் அவரை பணம் கொடுக்கும் பசுவாக பயன்படுத்தியதும், பணம் கேட்கும் மனப்பான்மையுடன் அவருடன் வாழ்க்கையை நடத்துகிறார் என்பது தெளிவாகிறது.

அதோடு மனைவியடன் பிற உணர்ச்சிப்பூர்வமான உறவை கணவரும், அவரது கணவரும் கொண்டிருக்கவில்லை என்பதை நீதிமன்றத்தால் புரிந்து கொள்ள முடுகிறது. மனைவி என்பவர் பணம் வழங்கும் ஏடிஎம்மோ அல்லது பணம் வழங்கும் பசுவோ கிடையாது. இதுபோன்ற காரணங்கள் மனைவிக்கு மன வேதனையை அளிக்க போதுமான காரணமாகும். இதனால் இந்திய விவாகரத்து சட்டம் 1869ன் அடிப்படையில் பிரிவு 10(எக்ஸ்) கீழ் விவாகரத்து வழங்கப்படுகிறது என உயர்நீதிமன்றம் கூறி உத்தரவு பிறப்பித்தது.

You My Like This Video