சமையல் எண்ணெய் கொடுத்தால் பியர் : பொருளாதார நெருக்கடியினால் உருவான பண்டமாற்று முறை!!

600

பொருளாதார நெருக்கடியினால்..

ஒரு லீற்றர் சூரியகாந்தி எண்ணெய் வழங்கினால் ஒரு லீற்றர் பியரை பெற்றுக்கொள்ளலாம் என ஜேர்மனியிலுள்ள பிரபல உணவகம் ஒன்று பண்டமாற்று முறை திரும்பியுள்ளது. உக்ரைன் – ரஷ்யா போரின் தா க்கம் உலகம் முழுவதும் பல பொருளாதார பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளது.

உலக நாடுகள் பயன்படுத்தும் சூரியகாந்தி எண்ணெய் 80சதவீதம் உக்ரைன் மற்றும் ரஷ்யாவிலிருந்தே ஏற்றுமதி செய்யப்படுகின்றது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்புக்குப் பின்னர் சூரியகாந்தி எண்ணெய் பற்றாக்குறை அதிகரித்துள்ளது.

இதனால் ஜேர்மனி உட்பட பல ஐரோப்பிய நாடுகள் சமையல் எண்ணெய், எரிவாயு உள்ளிட்ட பற்றாக்குறையால் தத்தளிக்கின்றது. இந்தநிலையில் சமையல் எண்ணெய் தட்டுப்பாட்டை சமாளிக்க, ஜேர்மனியில் உள்ள உணவகம் ஒன்று வித்தியாசமான பண்டமாற்று முறைக்கு திரும்பியுள்ளது.

அதன்படி பியர் பெற்றுக்கொள்ளவேண்டுமாயின் பணம் செலுத்தத் தேவையில்லை. அதற்கு பதிலாக அதற்கேற்ற அளவில் சூரியகாந்தி எண்ணெய் வழங்கினால் போதும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

You My Like This Video