இலங்கையில் மீண்டும் அதிகரிக்கும் கோவிட் மரணங்கள் : சுகாதார அமைச்சு தகவல்!!

751

அதிகரிக்கும் கோவிட் மரணங்கள்..

இலங்கையில் கோவிட் மரணங்கள் மீண்டும் அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. உலக சுகாதார அமைப்பினால் புதன் கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையின் படி இலங்கையில் பதிவான சராசரி கோவிட் நோயாளிகளின் எண்ணிக்கை 22 சதவீதம் அதிகரித்துள்ளது.

இதற்கமைய, ஜூலை மாதத்தில் 12 மரணங்கள் பதிவாகியுள்ளதுடன், மொத்த மரண எண்ணிக்கை16535 ஆக அதிகரித்துள்ளது. கடந்த ஜூன் 10 ஆம் திகதி பொது இடங்களில் முகக்கவசம் அணிவது என்ற கட்டாய விதியை இலங்கை திரும்பப் பெற்றது.

அதேநேரம் எரிபொருள் பற்றாக்குறை காரணமாக ஒரு சில பொது போக்குவரத்து மட்டுமே இருப்பதால் ஆயிரக்கணக்கான மக்கள் இப்போது பேருந்துகள் மற்றும் தொடருந்துகளில் பயணிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

இதனையடுத்து ஜூலை நடுப்பகுதியில் இருந்து ஒரு நாளைக்கான சராசரி தொற்றுக்கள் 15-20 ஆக அதிகரித்துள்ளதாக பொது சுகாதார சேவைகளின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் டாக்டர் ஹேமந்த ஹேரத் கூறியுள்ளார்.

தற்போது 703 நோயாளிகள் சுகாதார நிறுவனங்களில் மற்றும் வீட்டு அடிப்படையிலான பராமரிப்பில் மருத்துவ சிகிச்சை பெற்று வருகின்றனர்.இந்த நிலையில் இலங்கையில் இதுவரை இனங்காணப்பட்ட மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 664704 ஆக அதிகரித்துள்ளது.